Nonprofit Organization Management - Dallas, Texas, United States
Tamil Language Study Centers. டல்லஸ் வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் மொழியையும், பண்பாட்டையும் கற்றுத்தரும் நோக்கத்துடன் 2014 'இல் 'மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம்' (Metroplex Tamil Academy) குறளரசி. கீதா அருணாசலம் தலைமையில் தொடங்கப்பட்டது . மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் ஒரு அங்கமாக செயல்படும் இக்கல்விக்கழகம் 'கலிபோர்னியா கல்விக் கழக'த்தின்(CTA) பாடத்திட்டத்தை பின்பற்றுகிறது (CTA Affiliated School). அடுத்த தலைமுறை தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் முக்கிய குறிக்கோளுடன் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக்கழகம் டல்லாசில் Allen, Murphy, Flowermound, Frisco/Little Elm என நான்கு நகரங்களில் பள்ளிகள் நடத்தி வருகிறது. 200'க்கும் மேலான மாணவர்கள் தமிழ் பயில்கின்றனர். வயதுக்கேற்ற எளிமையான பாடத்திட்டம், கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்கள் கொண்ட பாட நூல், பயிற்சி நூல், மற்றும் கதை புத்தகங்கள், இவை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழை தொடர்ந்து விருப்பத்துடன் கற்க வழிவகுக்கும் என்பது உறுதி. பள்ளியில் பதிவு செய்ய வேண்டிய விவரங்களை www.catamilacademy.org வலைத்தளத்தளத்தில் காணலாம்.